Followers

TNPSC Group-2 (CSSE-I) 2011

on Thursday, June 23, 2011


·         TNPSC Group-2 (CSSE-I) 2011 – Exam Date once again postponed to the end of July 2011 (30-07-2011) from 03-07-2011
·          
·                                     ·       Total Vacancies are also increased to 6695 from 4329.
·                               
                                      ·       Last date for receipt of applications will be 21-06-2011.
·        
                                      ·       Candidates who have already applied need not apply for this   

                      supplement notification.
·        
                                     ·       Revised date of written examination: 30-07-2011

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு

on Wednesday, June 22, 2011


1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
) டாக்டர் இராஜேந்திர பிரசாத் ) டாக்டர் அம்பேத்கர் ) டாக்டர் சச்சிதானந்த சின் கா ) பண்டித ஜவஹர்லால் நேரு

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
) 26 டிசம்பர், 1949இல் )26 ஜனவரி, 1950இல் ) 26 நவம்பர், 1949 இல் ) 30 நவம்பர், 1949இல்

3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
) மாநிலங்களவையால் )மாநிலங்களவை மற்றும் மக்களவையால் ) மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம் ஆகியவையால் ) மாநிலங்களவை மற்றும் மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்

4) குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
) துணைக் குடியரசுத் தலைவர் ) மக்களவை சபாநாயகர் ) பிரதமர் ) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

5. அமைச்சரவை கூட்டாக
) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது. ) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது. ) மக்களவைக்குப் பொறுப்பானது ) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது

6. அடிப்படை உரிமைகள்
) மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் ) குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம் ) சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் ) பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்

7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
) அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர். ) சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர் ) ஐரிஸ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர் ) கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்

8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
) அரசியலமைப்பின் பகுதி IV ) அரசியலமைப்பின் பகுதி V ) அரசியலமைப்பின் பகுதி VI ) அரசியலமைப்பின் பகுதி III

9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
) திட்ட அமைச்சர் ) துணைப் பிரதம அமைச்சர் ) பிரதம அமைச்சர் ) நிதி அமைச்சர்

10. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
) 96 வகைகள் ) 66 வகைகள் ) 47 வகைகள் ) 99 வகைகள்

11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
) இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் ) இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் ) பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் ) இவை எல்லாவற்றையும் உடையவர்

12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
)கூட்டாட்சி அரசாங்கம் ) பாராளுமன்ற அரசாங்கம் ) ஜனாதிபதி முறை அரசாங்கம் ) தனித்துவம் வாய்ந்த நீதித்துறை

13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
) 62 ஆண்டுகள் ) 65 ஆண்டுகள் ) 60 ஆண்டுகள் ) 64 ஆண்டுகள்

14. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
) விதி 243 படி ) விதி 43 படி ) விதி 142 படி ) விதி 143 படி

15. இந்திய உச்சநீதிமன்றம்
) அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது ) பாராளுமன்றச்சட்டத்தால் அமைக்கப்பட்டது ) குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது ) இவைகளில் ஏதுமில்லை

16. இந்திய பாராளுமன்றம்
) மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது ) குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது. ) மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது. ) மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.

17. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ) 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ) 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை ) 80 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

18.மக்களவையின் தலைவர்
) அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். ) மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். ) வாக்களிக்க உரிமை இல்லை ) இரண்டு வாக்குகள்; சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வா

19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
) சட்டமன்றம் ) நிர்வாகத்துறை ) அரசியல் கட்சிகள் ) நீதித்துறை

20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
) 19 ) 17 ) 32 ) 30

21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
) சட்ட சமத்துவம் ) சமூக சமத்துவம் ) பொருளாதார சமத்துவம் ) அரசியல் சமத்துவம்

22. நீதி மறுபரிசீலனை என்பது
) நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது ) சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது ) நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது ) நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது

23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
) அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் ) அடிப்படை உரிமைகள் ) அடிப்படை கடமைகள் ) குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்

24.எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன?
) 40வது அரசியலமைப்பு திருத்தம் ) மூல அரசியல் அமைப்பு ) 39வது அரசியலமைப்பு திருத்தம் ) 42வது அரசியலமைப்பு திருத்தம்

25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது
) அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது ) அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது. ) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது. ) இவற்றில் ஏதுவுமில்லை

26. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
) புதுடில்லி ) கர்நாடகா ) கேரளா ) மும்பை

27.எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
) 356 ) 360 ) 372 ) 370

28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
) வாக்குரிமை பெறுவது இல்லை ) சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் ) எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார் ) சட்டத் திருத்ததில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்

29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் இரு அவை ) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இரு அவை ) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை

30. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் ) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால் ) பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களால் மட்டும் ) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால்

விடைகள்: 1) 2) 3) 4) 5) 6) 7) 8அ 9) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30)

இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு

1. மாநிலங்களின் மொழியைப் பற்றிக் கூறும் விதிகள்:
)விதிகள் 354 முதல் 374 )விதிகள் 342 முதல் 362
) விதிகள் 345 முதல் 347 ) இவை எதுவுமில்லை

2.சர்க்காரியா கமிஷன் எந்த உறவுகளைப் பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்டது
)பிரதம அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும்
)அமைச்சரவைக்கும், நீதிமன்றத்திற்கும்
)சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும்
) மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும்.

3. நுகர்வோர் நீதிமன்றங்களில் 
)வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு
) எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு
) எழுத்து மூலமான விவாதத்திற்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு.
) இவை அனைத்தும்

4. தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் மக்களவைக்கு அனுப்பப்படுகிறார்கள் 
) 36 உறுப்பினர்கள் ) 37 உறுப்பினர்கள்
) 38 உறுப்பினர்கள் ) 39 உறுப்பினர்கள்

5. யார் அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது
) குடியரசுத் தலைவர் )உச்சநீதிமன்றம்
) பாராளுமன்றம் ) இவை ஏதுமில்லை

6. மாவட்ட ஆட்சியாளருடைய முக்கியப் பணி 
) வருவாய்ப் பணி ) சட்டம் ஒழுங்கைக் காப்பது
) வளர்ச்சிப் பணிகள் ) இவை அனைத்தும்

7. உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள் செயல்படுவது 
) 1980-லிருந்து )மிகப் பழங்காலத்திலிருந்து
) 1890-லிருந்து ) 1687-லிருந்து

8.மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள எந்த ஒரு பொருளைப் பற்றியும் பாராளுமன்றம் சட்டமியற்றலாம்
)உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
) இந்திய ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
) தேசநலன் கருதி பாராளுமன்றம் மாநில அதிகாரப் பட்டியலிலுள்ள பொருள் பற்றி சட்டம் இயற்றலாம் என்று ராஜ்ய சபாவில் உள்ள மூன்றில்        இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினால்
) இவை ஏதுமில்லை

9. ,.ஜி.ஆர். எந்த வருடத்தில் தி.மு..விலிருந்து நீக்கப்பட்டார்
) 1967-ல் ) 1969-ல் ) 1972-ல் ) 1977-ல்

10.விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது 
) இந்து திருமணச்சட்டம் ) தடைச்சட்டம்
) ஒழுக்கமற்ற நடமாடுதல் அடக்குமுறைச்சட்டம்
) வாரிசுச்சட்டம்

11.பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
) ஆலய நுழைவு ) தீண்டாமை ஒழிப்புச்சட்டம்
) அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ) கல்வி

12. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 
) நவம்பர் 26, 1949 ) ஜனவரி 26, 1950
) ஆகஸ்டு 14, 1947 ) இவை ஏதுமில்லை

13. கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
) சொத்துரிமை ) மத சுதந்திர உரிமை
) பேச்சு சுதந்திர உரிமை ) சமத்துவ உரிமை

14. வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் 
) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாது
) ஒப்பந்தம் செய்ய முடியாது ) ஒப்பந்தம் செய்ய முடியும்
) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது

15. இந்தியப் பாராளுமன்றத்தின் பெரிய குழு எது
) பொதுக்கணக்குக் குழு ) மதிப்பீட்டுக் குழு
) பொதுத்துறைக் குழுக்கள் ) மனுக்குழு

16.ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி நியமனம் செய்கிறார்?
) 2 உறுப்பினர்கள் ) 9 உறுப்பினர்கள்
)12 உறுப்பினர்கள் ) 20 உறுப்பினர்கள்

17. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 
) 2004 ) 2000 ) 2001 ) 2002

18. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
) விதி 356 ) விதி 360 ) விதி 352 ) விதி 350

19. கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
) மாநிலப்பட்டியல் )மத்தியப்பட்டியல்
) பொதுப்பட்டியல் ) இவை அனைத்தும்

20. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது
) ஜம்மு- காஷ்மீரின் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு
) லால்பகதூர் சாஸ்திரி இறந்த பிறகு
) சுவரன் சிங்கின் ராஜினமாவிற்குப் பிறகு
) பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பிறகு.

21.அரசாங்கத்தில் பங்கு பெற் முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு 
) தன்னார்வத்தொண்டு அமைப்புகள்
) அழுத்தக் குழுக்கள் ) அரசாங்கம் சார அமைப்புகள்
) அரசியல் கட்சிகள்

22. தமிழ்நாட்டில் ...தி.மு.. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு 
) 1972 ) 1977 ) 1982 ) 1984
23. இரண்டு மதத்தினைஸ்சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
) இந்து திருமணச்சட்டம் ) சிறப்புத் திருமணச்சட்டம்
) கிறிஸ்தவ திருமணச்சட்டம் ) முகமதிய திருமணச்சட்டம்

24. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்
) ஒரே சட்டமன்றம் ) அதிகாரப் பங்கீடு
) நீதி மறு ஆய்வு ) அதிகாரப் பிரிவினை

25. இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம் 
) ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
) தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
) நீதித்துறையின் தனித்தன்மையைப் பாதுகாக்க
) பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க

26. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் 
) மக்களவை சபாநயகர் ) பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்
) இந்தியத் தலைமை நீதிபதி ) இந்தியத் தேர்தல் ஆணையம்

27. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது
) சமமான பிரதிநிதித்துவம் ) மக்கள் தொகையின் அடிப்படையில்
) மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலை ) தற்போதைய பொருளாதார நிலையைப் பொருத்து

28. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு 
) 1950 ) 1951 )1952 )1953

29. தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 
) 545 உறுப்பினர்கள் ) 555 உறுப்பினர்கள்
) 565 உறுப்பினர்கள் ) 575 உறுப்பினர்கள்

30. மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவது 
) ஏப்ரல் 10ம் தேதி ) ஜூன் 10ம் தேதி
) செப்டம்பர் 10ம் தேதி ) டிசம்பர் 10ம் தேதி

31. இந்திய ஜனாதிபதி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நிதிக்குழுவை நியமிக்கிறார்
) பிரிவு 320 ) பிரிவு 280 ) பிரிவு 356 ) பிரிவு 325

32. மாநிலத் தொழில் நீர்ப்பாயம் யாரை உள்ளடக்கி உள்ளது
) உச்சநீதிமன்ற நீதிபதி ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
) உயர்நீதிமன்ற நீதிபதி ) மாவட்ட செஷன்ஸ் நீதிபதி

33. பட்டியல் யை பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் A.Article 56
) குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் B.Article 55
) குடியரசுத் தலைவரின் தேர்தல் C.Article 61
) குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் D.Article 53
குறியீடுகள்:
) A-4, B-1, C- 2, D-3
) A-4, B-2, C- 1, D-2
) A-4, B-1, C- 2, D-3
) A-4, B-1, C- 3, D-2

34. பின்வருவனவற்றை வரிசைக் கிரமமாகக் கொண்டு வரவும்.
A) CBI, ESMA, SSC, CAT
B) ESMA, CBI, CAT, SSC
C) CAT, SSC, ESMA, CBI
D) CBI, CAT, SSC, ESMA

35. தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 
)12 ) 14 ) 16 )18
விடைகள்
1), 2), 3), 4), 5), 6), 7), 8), 9), 10), 11), 12), 13), 14), 15), 16), 17), 18), 19), 20), 21), 22), 23), 24), 25), 26), 27), 28), 29), 30), 31), 32), 33), 34), 35)