Followers

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்

on Sunday, May 8, 2011


தமிழர் நிலத்திணைகள்

என்பவை பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும். இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
  • காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
  • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
  • இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
  • வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
  • கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.

நானிலம்

தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.

1 comments:

TNUpdates Team said...

Hai, It's very useful information for TNPSC Aspirants can you please share the TNPSC Group 2 Question papers with answers Materials. :)

Post a Comment