Followers

இந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1900 - 1970



1904 திபெத் படையெடுப்பு.
1905
கர்சன் பிரபுவின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் வங்கப் பிரிவினை.
1906
இந்திய முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டது.
1911
டெல்லி தர்பார்; டெல்லி இந்தியாவின் தலைநகரமானது; ராஜாவும் ராணியும் இந்தியா வருகை தந்தனர்.
1916
முதல் உலக போர் ஆரம்பம்.
1916
லக்னோ ஒப்பந்தம் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரசால் கையொப்பம் ஆனது.
1918
முதல் உலகப்போர் முடிவுபெற்றது.
1919
மாண்டேகு ஜேம்ஸ் போர்டு சீர்திருத்தம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை.
1920
கிலாபத் இயக்கம் ஆரம்பம்.
1927
சைமன் குழு புறக்கணிப்பு. இந்தியாவில் வானொலி ஒளிபரப்பு ஆரம்பமானது.
1928
லாலா லஜபதிராய் இறந்தார்.
1929
ஆர்வாம் பிரபு உடன்படிக்கை. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1930
சட்ட மறுப்பு இயக்கம் ஆரம்பம். ஏப்ரல் 6 ம் நாள் மகாத்மா காந்தியால் தண்டி யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
1931
காந்தி-இர்வின் ஒப்பந்தம்.

1935
இந்திய அரசாங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
1937
மாகாண சுயாட்சிக்கான காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
1939
செப்டம்பர் 1 ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது.
1941
இரவீந்திரநாத்தாகூர் இறந்தார். இந்தியாவிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் தப்பிச் சென்றார்.
1942
ஆகஸ்டு 8 ம் நாள் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்தது, வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1943-44
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்து கூகுமாத் மற்றும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.வங்கத்தின் துயரம்.
1945
செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் அணிவகுப்பு நடைபெற்றது. சிம்லா மாநாடு நடைபெற்றது.> இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
1946
ஆங்கில அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வந்தது, மத்தியில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
1947
இந்தியா பிரிக்கப்பட்டது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித் தனியாக டோமினியன் அந்தஸ்து பெற்றது.
1948
ஜனவரி 30 ம் நாள் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். அரச ராஜ்யங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
1949
காஷ்மீரில் போர் நிறுத்தம். நவம்பர் 26 ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1950
ஜனவரி 26 ம் நாள் இந்தியா ஜனநாயக குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசியல் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது.
1951
முதல் ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
1952
முதல் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது.
1953
டேன்சிங் நார்கே மற்றும் சர் எட்மண்ட் கிலாரி இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
1956
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1957
இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. பைசா மதிப்பிலான நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கோவா விடுதலை பெற்றது.
1962
இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 20 ல் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியது.
1963
இந்தியாவின் 16 வது மாநிலமாக நாகலாந்து அறிவிக்கப்பட்டது.
1964
பண்டித ஜவஹர்லால் நேரு இறந்தார்.
1965
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
1966
தாஸ்கண்ட் ஒப்பந்தம், லால் பகதூர் சாஸ்திரி இறந்தார், திருமதி. இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967
நான்காவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. டாக்டர். ஜாஹிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969
இந்தியாவின் குடியரசுதலைவராக வி.வி. கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.பெரும் வணிக வங்கிகள் குடியரசு தலைவர் மேலாணையால் தேசியமயமாக்கப்பட்டன.
1970
மேகலயா தனி மாநிலமாக ஆக்கப்பட்டது.